மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள நோட்டீஸ்..!!

மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள நோட்டீஸ்..!!

மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள நோட்டீஸ்..!!
X

கடந்த 13-ம் தேதி காலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்து, தொடர்புடைய பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் கோரியதன் அடிப்படையில் மறு கூராய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாணவியின் பெற்றோர் தரப்பினரையும் மறு கூராய்வில் அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Kallakuruchi

நீதிமன்ற உத்தரவுபடி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறு உடற்கூராய்வு நடைபெற்றது. திருச்சி மருத்துவர் ஜூலியானா ஜெயந்தி, விழுப்புரம் மருத்துவர் கீதாஞ்சலி, சேலம் மருத்துவர் கோகுல ரமணன், தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் ஆகியோர் மறு உடற்கூராய்வில் பங்கேற்றனர். மேலும், மாணவியின் உடலை ஏற்கெனவே உடற்கூராய்வு செய்த கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் செந்தில் குமாரும் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தார்.

நேற்று மதியம் 1.45 மணிக்கு, ஸ்ரீமதியின் உடலை 'எக்ஸ்ரே' அறைக்கு எடுத்து சென்றனர். அங்கு எக்ஸ்ரே எடுத்து முடிந்தவுடன் பிரேத பரிசோதனை செய்யும் அறைக்கு வந்தது. மாலை 3.45 மணிக்கு மறு பிரேத பரிசோதனை துவங்கி, இரவு 7.00 மணிக்கு முடிவடைந்தது. இறுதி வரை பெற்றோர் வராததால், மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

Kallakuruchi

இதைத்தொடர்ந்து மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மறுகூராய்வுக்கு மாணவியின் பெற்றோர் தரப்பில் யாரும் வரவில்லை. முன்னதாக மறுகூராய்வு குறித்து மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதையடுத்து 3 மணி நேரத்திற்கும் மேலாக மாணவியின் சடலம் மறு உடற்கூராய்வு நடந்த நிலையில், மாணவியின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

உடற்கூராய்வில் மாணவியின் பெற்றோர் பங்கேற்காதநிலையில், இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலுள்ள மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு பெற்றோரை கேட்டுக்கொள்வதாக அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story
Share it