இனி, தமிழ் கட்டாயம்.. 40 சதவீதம் எடுத்தால்தான் பாஸ்..!
இனி, தமிழ் கட்டாயம்.. 40 சதவீதம் எடுத்தால்தான் பாஸ்..!

தமிழகத்தில், அரசுப் பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
அந்தவகையில், காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, தமிழ் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.
தமிழ் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோரின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் மட்டுமே திருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

