இனி அரசு பேருந்துகளில் இது கட்டாயம்… போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!
இனி அரசு பேருந்துகளில் இது கட்டாயம்… போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன.
அந்த வகையில், சென்னை மாநகர பேருந்துகளில் பயணிப்போர் முகக்கவசம் அணிந்துருப்பதை நடத்துனர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிப்போர் முகக்கவசம் அணிந்திருப்பதை நடத்துநர்கள் உறுதி செய்ய வேண்டும். பேருந்துகளில் நடத்துநர், ஓட்டுநர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். போக்குவரத்துப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பொதுஇடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் நாளை முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

