Theme Check

பிரபல நடிகை வீட்டில் பணம், நகை திருட்டு – நர்ஸ் கைது!!

பிரபல நடிகை வீட்டில் பணம், நகை திருட்டு – நர்ஸ் கைது!!

பிரபல நடிகை வீட்டில் பணம், நகை திருட்டு – நர்ஸ் கைது!!
X

பாலிவுட் நடிகை சோனம் கபூர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடுபோன சம்பவத்தில் அங்கு பணிபுரிந்த செவிலியரையும், அவரது கணவரையும் போலீஸார் கைது செய்தனர்.

புகழ்பெற்ற பாலிவுட் நடிகையான சோனம் கபூர், கணவருடன் டெல்லியில் உள்ள அம்ரிதா ஷெர்கில் மார்க் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளைப் போனது.

sonam

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில், அவர்களின் வீட்டில் பணிபுரிந்து வரும் செவிலியரான அபர்ணா ரூத் வில்சன் என்பவரின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவரும், அவரது கணவர் நரேஷ் குமாரும் இணைந்து இந்தக் கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது

sonam

இதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை மீட்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

Next Story
Share it