Theme Check

சக தோழியே திருட்டு பழி சுமத்தியதால் நர்சிங் மாணவி தற்கொலை..!!

சக தோழியே திருட்டு பழி சுமத்தியதால் நர்சிங் மாணவி தற்கொலை..!!

சக தோழியே திருட்டு பழி சுமத்தியதால் நர்சிங் மாணவி தற்கொலை..!!
X

தூத்துக்குடி சந்தி விநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் குமாரலிங்கம் என்பவரின் மகள் மீனாட்சி (22). தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வரும் இவர், மருத்துவமனையில் பயிற்சி நர்சாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனாட்சியுடன் படிக்கும் சக மாணவியின் செயின் காணாமல் போனதாக தெரிகிறது.

thoothukudi

அந்த செயினை மீனாட்சி எடுத்திருக்கலாம் என்று அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. தன் மீது திருட்டு பழி சுமத்தி விட்டார்களே என்று மன உளைச்சலில் இருந்த மீனாட்சி அரசு மருத்துவமனையில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி கிடந்த அவரை பார்த்த சக மாணவிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Dead-body

இதனிடையே பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்து, மகள் சாவுக்கு நீதி வேண்டும் என கூறி பிரேத பரிசோதனை கூடம் அருகே போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் இன்று மீனாட்சியின் உடலை பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story
Share it