தவறுமேல் தவறு செய்கிறார் ஓபிஎஸ்... ஈபிஎஸ் தரப்பு கண்டனம் !!
தவறுமேல் தவறு செய்கிறார் ஓபிஎஸ்... ஈபிஎஸ் தரப்பு கண்டனம் !!

அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து என்னசெய்யப்போகிறார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரை சந்தித்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். இதில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு உட்சபட்ச அதிகாரம் கொண்டது. அந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுக்கு ஓபிஎஸ் கட்டுப்பட வேண்டும்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வரவேண்டும் என தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் விரும்புகின்றனர். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொண்டர்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் போய் சேராது என்ற கவலையை ஓபிஎஸ் தரப்பினருக்கு சொல்லிக்கொள்கிறேன்.
அதிமுகவில் அராஜகப்போக்கு நிலவுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அப்படி என்ன அராஜகம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் தான் தவறுமேல் தவறு செய்து வருகிறார். சென்னையில் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் குறித்து நாளை தெரியவரும் என, அவர் தெரிவித்தார்.
newstm.in

