ஓ சொல்றியா மாமா ! - மணமகள் குத்தாட்டம்.. வாயடைத்துப்போன மணமகன்- வீடியோ !
ஓ சொல்றியா மாமா ! - மணமகள் குத்தாட்டம்.. வாயடைத்துப்போன மணமகன்- வீடியோ !

திருமண விழாவில் ஒரு ஜோடி, 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது.
முன்பெல்லாம், திருமணத்திற்கு தயாராகும் பெண்கள், குனிந்த தலை நிமிராமல் வந்து மணமேடையில் உட்காருவார். அந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், திருமண நிகழ்ச்சி என்றால் நண்பர்கள், உறவினர்கள் மட்டுமல்லாமல் மணமேடைக்கு வரும் போதே மணப்பெண் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் தான் வருவதை காணமுடிகிறது.
இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது, மணப்பெண் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அல்லு அர்ஜூன் நடிப்பில் ஹிட்டான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற, ஊ சொல்றியா மாமா, பாடலுக்கு திருமண ஜோடி அட்டகாசமாக நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் மணமகனும், மணமகளும் பாரம்பரிய மராட்டிய உடையை அணிந்திருப்பதைக் காண முடிகிறது. மாலை மாற்றும் சடங்கின் போது, இருவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து அந்த பாடலின் துடிதுடிப்பான இசைக்கு ஏற்றவாறு நடனமாடுவதை வீடியோவில் பதிவாகியுள்ளளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
newstm.in

