Theme Check

அட கடவுளே... வசூல் ராஜா MBBS பாணியில் நடந்த டிஜிட்டல் காப்பி !!

அட கடவுளே... வசூல் ராஜா MBBS பாணியில் நடந்த டிஜிட்டல் காப்பி !!

அட கடவுளே... வசூல் ராஜா MBBS பாணியில் நடந்த டிஜிட்டல் காப்பி !!
X

நவீனகாலத்துக்கு ஏற்ப தேர்வின் போது எப்படி ஏமாற்றுவது, எப்படி காப்பி அடிப்பது என்பதில் மாணவர்களும் அப்டேட் செய்துக்கொண்டு மாறி வருகின்றனர். பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு பிட் அடித்த காலம் போய் இப்பபோது கண்ணை திறந்தாலே பதில் தெரியும் அளவுக்கு ஹை டெக் நவீனத்துவம் வந்துவிட்டது.

அவ்வாறு தொழில்நுட்ப உதவியுடன் ஹை டெக் லெவலில் காப்பி அடித்த இளைஞர்கள் சிக்கிய கதை இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தை நமக்கு கண்முன்னே நிறுத்துகிறது.

medical-student

இந்தூரில் இரண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வில் ஏமாற்ற, காதுகளில் மைக்ரோ சைஸ் புளூடூத் கருவிகளை பொருத்திக் கொண்டு மோசடி செய்துள்ளனர். மகாத்மா காந்தி மெமோரியல் (MGM) மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பின் கடைசி ஆண்டு தேர்வு எழுதிக் கொண்டிருக்கையில், ​​பறக்கும் படை இருவரையும் கையும் களவுமாக பிடித்தது.

இருவரும் புளூடூத் மூலம் இயங்கும் மைக்ரோஃபோன்களை காதுகளில் பொருத்திக் கொண்டு, யாரும் கவனிக்காத வகையில் அல்லது பார்க்க முடியாத வகையில், கேள்விகளுக்கான பதிலை கேட்டு எழுத திட்டமிட்டிருந்தனர்.

medical-student

இந்த மைக்ரோஃபோன்கள் இரு மாணவர்களின் காதுகளிலும் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டிருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம். இரு மாணவர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it