Theme Check

அட கடவுளே.. வாக்குசேகரித்த வேட்பாளரை கடித்த தெருநாய் !

அட கடவுளே.. வாக்குசேகரித்த வேட்பாளரை கடித்த தெருநாய் !

அட கடவுளே.. வாக்குசேகரித்த வேட்பாளரை கடித்த தெருநாய் !
X

சென்னை தாம்பரம் மாநகராட்சியில் 2ஆவது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்.தினகரன் என்பவர் போட்டியிடுகிறார். வேட்புமனு ஏற்கப்பட்டது முதல் அவர் தனது கட்சியினருடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தினகரன் அனகாபுத்தூர் பகுதிக்கு வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பாலாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் வாக்கு கேட்டுவிட்டு வெளியே வந்தார். அங்கு தெருநாய்கள் அதிகம் இருந்தன. வேட்பாளர் தினகரன் உள்ளிட்டோர் அங்கிருந்து செல்ல முயன்றப்போது, தெரு நாய் ஒன்று வேகமாக இவரை நோக்கி ஓடிவந்தது. இவர் சுதாகரித்து ஓடுவதற்குள் இவரது காலை கடித்தது. இதில் லேசான காயம் ஏற்பட்டது.

dog

இதனால், பாதியில் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்று நாய்க்கடி தடுப்பூசி போட்டுக் கொண்டார். இது குறித்து பேசிய வேட்பாளர் தினகரன், மீண்டும் பிரச்சாரத்தை தொடங்குவேன் என கூறினார். மேலும், அனகாப்புத்தூர் பகுதியில் தெரு நாய்கள் அதிகம் உள்ளன. இந்த பகுதிதற்போது தாம்பரம் மாநகராட்சியில் உள்ளது. இதற்கு முன்னர் தாம்பரம் நகராட்சியில் இருந்தது. அப்போது நாய்களை முறையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை, என்றார்.

பிரச்சாரத்துக்கு செல்லும்போது வேட்பாளரை நாய் கடித்த சம்பவம் அனகாபுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் மற்ற வேட்பாளர்கள் படைசூழ பாதுகாப்புடன் சென்று வாக்குசேகரித்து வருகின்றனர்.

newstm.in


Next Story
Share it