Theme Check

அட கொடுமையே..!! மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி..!!

அட கொடுமையே..!! மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி..!!

அட கொடுமையே..!! மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி..!!
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் டவுன் மணிகூண்டு அருகில் தனியார் அசைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் இந்த ஓட்டலில் நேற்று மதியம் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு அந்த உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மட்டன் பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அதில் கரப்பாண்பூச்சி தென்பட்டதால் இருவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த கடையின் ஊழியரிடம் மூர்த்தி மற்றும் அவரது மனைவி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே பகுதியில் உள்ள அசைவ ஹோட்டலில் ‘தந்தூரி சிக்கன்’ சாப்பிட்ட 10 வயது சிறுமி லோஷினி உடல் உபாதைகள் ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it