கிட்டத்தட்ட 1500 மின்சார வாகனங்களை திரும்பப் பெற ஓலா முடிவு..!!

கிட்டத்தட்ட 1500 மின்சார வாகனங்களை திரும்பப் பெற ஓலா முடிவு..!!

கிட்டத்தட்ட 1500 மின்சார வாகனங்களை திரும்பப் பெற ஓலா முடிவு..!!
X


தொடர் உச்சத்தில் இருந்து கொண்டு இருக்கும் பெட்ரோல் டீசல், விலை காரணமாக, சமீபகாலமாக மக்கள் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நம் நாட்டின் வெப்பநிலைக்கு ஏற்ப அதன் பேட்டரிகள் முறையாக வடிவமைக்கப்படாததால் சமீப காலமாக வாகனங்கள் தீப்பற்றி எரிவது போன்ற அபாயகரமான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனிடையே மின்சார வாகனங்களின் பேட்டரிகளுக்கு என நிதி ஆயோக் புதிய கொள்கைகளை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிக்கும் ஓலா நிறுவனம் தனது வாகனங்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து 1,441 மின்சார வாகனங்களை திரும்பப் பெறுகிறோம். அதனை எங்களது பொறியாளர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்துவார்கள்.

அதன் மூலம் பேட்டரி, தெர்மல் போன்ற சிஸ்டம்கள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.” என ஓலா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it