Theme Check

பழைய கட்டணம்.. புதிய பாடத்திட்டம்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!

பழைய கட்டணம்.. புதிய பாடத்திட்டம்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!

பழைய கட்டணம்.. புதிய பாடத்திட்டம்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!
X

பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

அதன்படி பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கான கட்டணம் ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக 79,600 ரூபாயும், அதிகபட்சமாக 1,89,800 ரூபாயுமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எம்இ., எம்டெக், எம்ஆர்க் படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சமாக 1,41,200 ரூபாயும், அதிகபட்சமாக 3.34 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு சென்ற ஆண்டு வசூலித்த கட்டணமே தொடரும்; அதில் மாற்றம் இருக்காது. ஏஐசிடிஇ சொல்லி இருந்தாலும் கூட, தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.

ஏஐசிடிஇ சொல்வதை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூன் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த புதிதாக 10 பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்” என்று அவர் கூறினார்.

Next Story
Share it