அரசு சார்பில் ‘ஆன்லைன் டாக்சி’ சேவை.. ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் அமல்..!

அரசு சார்பில் ‘ஆன்லைன் டாக்சி’ சேவை.. ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் அமல்..!

அரசு சார்பில் ‘ஆன்லைன் டாக்சி’ சேவை.. ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் அமல்..!
X

தனியார் ஆன்லைன் வாடகை கார் சேவையைப் போல, கேரளாவில் அரசு சார்பில் ஆன்லைன் டாக்சி சேவை தொடங்கப்படுகிறது.

இது குறித்து கேரள மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சிவன் குட்டி, செய்தியாளர்களிடம் பேசும் போது, “நாட்டில் ஒரு மாநில அரசே ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறையாகும்.

இந்த சேவையை அரசு துறை நடத்துவது ஒருவேளை உலக அளவிலும் முதல் நிகழ்வாக இருக்கலாம். முழுமையான பாதுகாப்பான மற்றும் சர்ச்சை இல்லாத பயணம் என்பது கேரளா சவாரியின் வாக்குறுதியாகும்.தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ள ஆட்டோ - டாக்சி தொழிலாளர் துறைக்கு இந்த தனித்துவமான சேவை ஒரு உதவிகரமாக இருக்கும்” என்று கூறினார்.

கேரள அரசின் இந்த முன்னோடி திட்டமான இ-டாக்சி சேவை, மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் தொடக்க நாளான ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Tags:
Next Story
Share it