ஒரே நாள் : பைக்காக மாறிய சைக்கிள்!!
ஒரே நாள் : பைக்காக மாறிய சைக்கிள்!!

சோமேட்டோ நிறுவனத்தில் டெலிவரி மேனாக ராஜஸ்தானை சேர்ந்த துர்கா மீனா என்பவர் பணி புரிந்து வருகிறார். ஆசிரியரான இவர் கடந்த 21 ஆண்டுகளாக கற்பித்து வந்துள்ளார். கொரோனா பெருந்தொற்று நோய் காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் வேலையை இழந்தார்.
தற்போது தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக, சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் வேலையை மேற்கொண்டார். இவர் சைக்கிளில் டெலிவரி செய்வதை கவனித்த ஆதித்யா ஷர்மா என்பவர் அவரைப் பற்றி முதன்முதலில் ட்விட்டரில் பதிவிட்டார்.

ராஜஸ்தானின் கடுமையான வெப்பத்தில் துர்கா சைக்கிளை பயன்படுத்தி சரியான நேரத்தில் உணவை எவ்வாறு வழங்கி வருகிறார் என்பதைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் B.COM இளங்கலை படிப்பை முடித்துள்ளார், M.COM படிக்க விரும்புகிறார்.
மேலும், துர்கா மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த விரும்புவதாகவும், லேப்டாப் மற்றும் பைக்கிற்காக சேமித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். துர்காவின் நிலையை அறிந்து கொண்ட ஆதித்யா அவரது பைக்கிற்கான நிதி திரட்டும் வேலையை தொடங்கினார்.
Today my order got delivered to me on time and to my surprise, this time the delivery boy was on a bicycle. today my city temperature is around 42 °C in this scorching heat of Rajasthan he delivered my order on time
— Aditya Sharma (@Adityaaa_Sharma) April 11, 2022
I asked for some information about him so 1/ pic.twitter.com/wZjHdIzI8z
சில மணி நேரங்களுக்குப் பிறகு, தேவையான பணம் மற்றவர்கள் அளித்த நிதியின் மூலம் கிடைத்து விட்டதாக ஆதித்யா கூறினார். அதன் பிறகு அவருக்கு தேவையான வண்டியை அந்த பணத்தை பயன்படுத்தி வாங்கி தந்துள்ளனர். இதனால் துர்கா மீனா மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
newstm.in

