ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை.. இந்தியாவுக்குப் பின்னுக்குத் தள்ளிய பாகிஸ்தான் அணி !!
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை.. இந்தியாவுக்குப் பின்னுக்குத் தள்ளிய பாகிஸ்தான் அணி !!

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் அணி 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அண்மையில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், 106 புள்ளிகளுடன் ஐசிசி தரவரிசையில் இந்தியாவை விடவும் கூடுதலாக ஒரு புள்ளியை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி 4ஆம் இடத்தைப் பிடித்து இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்திய அணி 5ஆவது இடத்தில் உள்ளது.
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்ததாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன. 4ஆம் இடத்தில் பாகிஸ்தானும் 5ஆம் இடத்தில் இந்தியாவும் உள்ளன.
இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதில் வெற்றிகளைப் பெறும்போது தரவரிசையில் முன்னேற வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அணி அடுத்ததாக ஆகஸ்ட் மாதத்தில் தான் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
Pakistan 🔼
— ICC (@ICC) June 13, 2022
India 🔽
ICYMI, 🇵🇰 have leapfrogged 🇮🇳 in the @MRFWorldwide ICC Men's ODI Team Rankings 👀
Details 👉 https://t.co/4KEZKZGaG3 pic.twitter.com/Hd0mjsp74o
newstm.in