Theme Check

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி..!!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி..!!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி..!!
X

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. உலகம் முழுவதும் 58 நாடுகளைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

Monkey-pox

கடந்த 16-ம் தேதி துபாயில் இருந்து 40 வயதான நபர் ஒருவர் கேரளா வந்து சேர்ந்தார். அவருக்கு காய்ச்சல் மற்றும் உடலில் லேசான கொப்பளங்கள் இருந்ததால், அவருக்கு குரங்கு அம்மை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உமிழ் நீர் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பூனாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் படி இந்தியாவில் முதல் குரங்கு அம்மை தொற்று பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Monkey-pox

இந்தியாவில் 2வது குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவிலேயே பதிவாகி உள்ளது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்காக ஒன்றிய அரசின் சிவில் விமான போக்குவரத்து துறையுடன் இணைந்து பயணிகளிடம் தொடர்ந்து பரிசோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து வரர் பயணிகள் வழியாக குரங்கு அம்மை தொற்று தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it