ஆன்லைன் மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்!!
ஆன்லைன் மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற உள்ளது. tnmedicalselection.org என்ற இணைய தளம் மூலம் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
கலந்தாய்வில் பங்கேற்க பதிவு செய்த மாணவர்கள் இணையத்தில் லாக் இன் செய்து எந்தெந்த கல்லூரிகள் வேண்டும் என தேர்வு செய்யலாம். முதல் விருப்பம் சென்னை மருத்துவக் கல்லூரி, 2ஆவது விருப்பம் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மூன்றாவது மதுரை மருத்துவக் கல்லூரி என்றால் அந்த வரிசையிலேயே தங்கள் பட்டியலில் சேர்க்கலாம்.
கல்லூரிகளை சேர்ப்பதில் கட்டுப்பாடு கிடையாது. அனைத்து கல்லூரிகளையும் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து பட்டியல் தயார் செய்துக் கொள்ளலாம். அதில் கல்லூரிக்ளை சேர்க்கவும், விலக்கவும், பட்டியலின் வரிசையை மாற்றியமைக்கவும் வசதி உள்ளது.

பட்டியலை முடிவு செய்தவுடன் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி-யை அதில் பதிவிட வேண்டும். அதன் பின் இந்த விருப்ப பட்டியலை மாற்ற முடியாது. அதனை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
இன்று முதல் பிப்ரவரி 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வு செய்து இறுதி செய்ய வேண்டும். அதன் பின் பிப்ரவரி 7ஆம் தேதி மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். பிப்ரவரி 10ம் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் செல்ல வேண்டும். அதற்காக மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்த 3 மையங்களில் ஒன்றுக்கு அழைக்கப்படுவார்கள்.
பிறகு யார் யாருக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று முடிவுகள் பிப்ரவரி 15ஆம் தேதி வெளியாகும். இந்த முடிவுகளை மாணவர்கள் பிப்ரவரி 16ஆம் தேதி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 22 மாலை 3 மணிக்குள் கல்லூரிக்கு சென்று தங்கள் அசல் சான்றிதழ்களை மாணவர்கள் சமர்ப்பித்து சேர வேண்டும்.
newstm.in

