Theme Check

இன்னும் 6 மாசம் தான்… சசிகலா கொடுத்த உறுதிமொழி பத்திரம்!!

இன்னும் 6 மாசம் தான்… சசிகலா கொடுத்த உறுதிமொழி பத்திரம்!!

இன்னும் 6 மாசம் தான்… சசிகலா கொடுத்த உறுதிமொழி பத்திரம்!!
X

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகள் இருக்கின்றன. அதில் 6ஆவது வார்டில் பாஜக சார்பில் சசிகலா என்ற வழக்கறிஞர் போட்டியிடுகிறார்.

இவர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்காளர்களிடம் உறுதிமொழி பத்திரம் அளித்து வாக்கு சேகரித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பத்திரத்தில், ”பெரியகுளம் நகராட்சி 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வழக்கறிஞர் சசிகலா 9/19, முத்தாலம்மன் சாவடி தெரு, வடகரை, பெரியகுளம், தேனி மாவட்டம் - 625 601 என்ற முகவரியில் வசிக்கும் நான், தேர்தல் வாக்குறுதி பட்டியலில் கொடுக்கப்பட்ட 12 வாக்குறுதிகளில் குறைந்தது 10 வாக்குறுதிகளை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாதத்திற்குள் நிறைவேற்றுவேன்.

sasikala bjp

அப்படி நிறைவேற்றாவிட்டால் எனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பொதுமக்களுக்கு இதன்மூலம் மனப்பூர்வமாக உறுதி அளிக்கிறேன் எனக் கூறப்பட்டுள்ளது.

பாஜகவிற்கு பெரிதாக வெற்றி வாய்ப்பு இல்லை என்று பொதுவாக கூறப்படும் நிலையில், அக்கட்சி வேட்பாளரின் பிரச்சார வியூகம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

உள்ளூர் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கால் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

newstm.in

Next Story
Share it