ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்… பிரபல நடிகையின் ரூ.1.48 லட்சம் காலி!!
ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்… பிரபல நடிகையின் ரூ.1.48 லட்சம் காலி!!

சென்ஃபோனில் வந்த ஒரு மெசேஜால் நடிகை ஒருவர் ரூ.148 லட்சம் இழந்துள்ளார்.
மராத்தி படங்களில் நடித்து வரும் 64 வயது நடிகை ஒருவர் மும்பை விலே பார்லே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருக்கிறார்.
அதில், ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து என் கணவரின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. Know Your Customer (KYC) விபரங்கள் சரியில்லை. அதை செல்போன் எண் மூலம் சரிசெய்யவில்லை என்றால் உங்களின் எண் பிளாக் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த எண்ணுக்கு போன் செய்தபோது ஒருவர் தான் ஏர்டெல் ஊழியர் என்று சொல்லி Quick Support application- டவுன்லோடு செய்யச் சொன்னார். (அந்த அப்ளிகேஷன் மூலம் அடுத்தவரின் மொபைல் நடவடிக்கைகளை பார்க்க முடியும்).

அவர் சொன்னதை எல்லாம் நான் செய்தேன். KYC கட்டணமாக 10 ரூபாய் செலுத்தச் சொன்னார். பின்னர் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கச் சொன்னார். நானும் கொடுத்துவிட்டேன்.
பின்னர் சந்தேகம் அடைந்து ஏர்டெல் கடைக்கு சென்று விசாரித்தால், நாங்கள் எந்த காலும் பண்ணவில்லை என்றார்கள். வங்கிக்கு சென்றால் அந்த நபர் என் கிரெடிட் கார்டு விபரங்களை பயன்படுத்தி ரூ. 1.48 லட்சம் பணம் எடுத்தது தெரிய வந்தது.
அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். போலி தொலைபேசி அழைப்புகள், எஸ்எம்எஸ்-களை நம்ப வேண்டாம் என காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும் கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
newstm.in

