Theme Check

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு! வெளியான கருத்துக் கணிப்பு!!

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு! வெளியான கருத்துக் கணிப்பு!!

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு! வெளியான கருத்துக் கணிப்பு!!
X

பஞ்சாபில் மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலி தளம், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக களத்தில் இருந்தன. இதனால் அங்கு நான்கு முனைப் போட்டி நிலவியது.

இதில் காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில், பஞ்சாபில் எந்தெந்தக் கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறது என்பது குறித்த கருத்துக்கணிப்பு வெளியாகியிருக்கிறது.

Arvind_Kejriwal pb

அதில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. வேளாண் சட்டம் போராட்டம் காரணமாக பாரதிய ஜனதா கட்சி பஞ்சாபில் நிச்சயம் ஆட்சியை பிடிக்காது என்பது தெரிந்ததே.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டதாக தெரிகிறது. அனைத்து கருத்துக்கணிப்பிலும், ஆம் ஆத்மியே பஞ்சாபில் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளது.

newstm.in

Next Story
Share it