டெலிகிராம் செயலிக்கு தடை விதித்து அதிரடி உத்தரவு !
டெலிகிராம் செயலிக்கு தடை விதித்து அதிரடி உத்தரவு !

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்ஆப், ட்விட்டர், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு நாட்டின் அதிபர், பிரதமரை தேர்ந்தெடுக்க தேர்தல்களில் முக்கிய பிரச்சார கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிரேசிலில் வரும் அக்டோபரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி டெலிகிராம் செயலியில் குறிப்பிட்ட அரசியல் கட்சியினருக்கு ஆதரவாகவும் ஒரு தலைபட்சமாகவும் கருத்துகள் பகிரப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. எனவே, பொய் செய்திகள் பரப்பப்படுவதை தடுக்க வேண்டுமென டெலிகிராம் செயலி நிறுவனத்துக்கு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.

எனினும் டெலிகிராம் செயலி எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உச்சநீதிமன்றம் அந்த செயலிக்கே தடை விதித்துள்ளது. அக்டோபரில் நடைபெற இருக்கும் மறுதேர்தலுக்கு டெலிகிராமை ஒரு கருவியாக பயன்படுத்த நினைத்த பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு இந்த தடை அதிர்ச்சியாக அமைந்துள்ளது. டெலிகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்கின்றனர்.
இதுகுறித்து நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் தன்னுடைய தீர்ப்பில், பிரேசில் அதிகாரிகளின் கோரிக்கைகளை டெலிகிராம் பலமுறை புறக்கணித்துள்ளது. குறிப்பாக சில கணக்குகளை முடக்க டெலிகிராம் மறுத்துள்ளது. மேலும் போல்சனாரோவின் கூட்டாளியான ஆலன் டாஸ் சாண்டோஸ் குறித்த தகவல்களை வழங்க மறுத்துள்ளது என்று கூறியுள்ளார். அலன் டாஸ் டெலிகிராமில் சில பொய்யான கருத்துகளை பரப்பி வந்துள்ளார்.

பிரேசிலில் வாட்ஸ்ஆப், கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் நாட்டின் சட்டங்களை பின்பற்றுவதாகவும் அதேநேரத்தில் டெலிகிராம் அவற்றை பின்பற்றத் தவறுவதாகவும் தலைவர்கள் அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
newstm.in

