Theme Check

ஒரு நாள் கல்வி நிலையங்களை மூட உத்தரவு! எங்கு தெரியுமா?

ஒரு நாள் கல்வி நிலையங்களை மூட உத்தரவு! எங்கு தெரியுமா?

ஒரு நாள் கல்வி நிலையங்களை மூட உத்தரவு! எங்கு தெரியுமா?
X

கனமழையை முன்னிட்டு இன்று ஒரு நாள் அனைத்து கல்வி நிலையங்களையும் மூடும்படி அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கம்ரூப் மாவட்டத்தில் இன்று கன மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிலையங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

assam flood 1

எனினும், முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகளை நடத்த விதிவிலக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு கம்ரூப் மாவட்ட பேரிடர் மேலாண் கழகத்தின் துணை ஆணையாளர் மற்றும் தலைவரின் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அசாமில் 25 மாவட்டங்கள் வெள்ளம், நில சரிவுகளால் பாதிக்கப்பட்டு உள்ளன. 11.09 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், கடந்த 24 மணிநேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it