Theme Check

ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘டுன்’ திரைப்படம்!!

ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘டுன்’ திரைப்படம்!!

ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘டுன்’ திரைப்படம்!!
X

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்று வரும் 94ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் டுன் திரைப்படம் இதுவரை 6 விருதுகளை பெற்றுள்ளது.

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த சவுண்ட் உள்ளிட்ட பிரிவுகளில், 'டுன்' திரைப்படம் விருதுகளை குவித்துள்ளது.

dune

சிறந்த துணை நடிகைக்கான விருது, 'வெஸ்ட் சைட் ஸ்டோரி' திரைப்படத்தில் நடித்த ஹரியானா டிபோஸ் என்ற நடிகை வென்றுள்ளார்.

ariana

அனீஸ் கரியாவின் லைவ் ஆக்சன் குறும்படமான தி லாங் குட்பைக்காக இந்த ஆண்டு ரிஸ் அகமது முதல் அகாடமி விருதை வென்றுள்ளார்.

riz

'கோடா'வில் மீனவர் மற்றும் தந்தையாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதை வென்ற முதல் காது கேளாதவர் என்ற பெருமையை டிராய் கோட்சூர் பெற்றார்.

troy

ஜப்பானின் 'டிரைவ் மை கார்' படம், சிறந்த சர்வதேச அம்சத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.

crive my car

சிறந்த அனிமேஷன் படமாக, டிஸ்னி தயாரித்த 'என்காண்டோ' (Encanto) திரைப்படம் தேர்வாகியுள்ளது.

encanto

க்ரூயெல்லா படத்திற்காக ஜென்னி பீவன் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளார்.

newstm.in

Next Story
Share it