பகீர் சம்பவம்! மகளைக் கொன்று குப்பையில் வீசிய தந்தை!!
பகீர் சம்பவம்! மகளைக் கொன்று குப்பையில் வீசிய தந்தை!!

கர்நாடகா மாநிலம், மைசூர் மாவட்டம் காகுன்டி கிராமத்தை சேர்ந்த ஷாலினி என்பவர் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இதையடுத்து மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர்இளைஞரின் பெற்றோர் பெண் கேட்டுச் சென்றபோது, திருமணம் செய்து தரமுடியாது என்று பெண்ணின் பெற்றோர் கூறிவிட்டனர்.
இந்த விவகாரம் காவல்நிலையம் வரை சென்றது. இதையடுத்து ஷாலினிக்கு 18 வயது ஆகாததால் அவரால் திருமணம் செய்துகொள்ள முடியாது என போலீஸார் தெரிவித்து இரு குடும்பத்தையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், ஷாலினி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்தார். இதனைத் அறிந்து கொண்ட அவரின் பெற்றோர் கடந்த 6ஆம் தேதி இரவு சாலினியை கடுமையாகத் தாக்கி கொலை செய்தனர்.
பிறகு அவரது உடலைக் குப்பைத்தொட்டியில் வீசியுள்ளனர். பின்னர் ஷாலினியின் தந்தை சுரேஷ் காவல் நிலையத்தில் சரணடைந்து நடந்த விவரத்தைத் தெரிவித்துள்ளார். போலீஸார் ஷாலினியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஷாலினியின் தந்தையை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

