280 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளுடன் பிடிபட்ட பாகிஸ்தான் படகு..!!
280 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளுடன் பிடிபட்ட பாகிஸ்தான் படகு..!!

இந்திய கடலோரக் காவல் படையினர் குஜராத் கடற்கரை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பாகிஸ்தானை சேர்ந்த படகு ஒன்று இந்திய கடல் எல்லைக்குள் வந்துள்ளது.
இதையடுத்து அந்த படகை பிடித்து அதில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, அதில் ரூ.280 கோடி மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து படகில் இருந்த ரூ.280 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்த அதிகாரிகள், படகுடன் சேர்த்து அதில் இருந்த 9 பேரையும் விசாரணைக்காக குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
Tags:
Next Story

