Theme Check

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு.. பரிந்துரைக்கிறார் பழனிசாமி..!

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு.. பரிந்துரைக்கிறார் பழனிசாமி..!

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு.. பரிந்துரைக்கிறார் பழனிசாமி..!
X

தஞ்சாவூர் மாநகராட்சி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்:அ.தி.மு.க., இணை  ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி | Dinamalar Tamil News
அப்போது அவர் பேசியதாவது: “தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சும், தேர்தல் முடிந்த பின் ஒரு பேச்சும் என திமுக இரட்டை வேடம் போடுகிறது.

திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. தரமற்ற அழகான பொங்கல் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் அல்ல.. நோபல் பரிசே வழங்கலாம்” என்றார்.

இதையடுத்து அவர் திருச்சியில் பேசியதாவது: “பொய் வழக்குகளுக்கு, அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள். சட்டசபையில் எம்ஜிஆர் மீது செருப்பை வீசி, மைக்கை பிடுங்கிய போதும், ஜெயலலிதாவை சட்டசபையில் தாக்கிய போதும் ‘முதல்வராக நுழைவேன்' என்று சபதம் செய்த இருவரும், அதை நிறைவேற்றிக் காட்டினர்.
If The Nobel Prize For Lying Is Given, It Should Be Given To Stalin -  Edappadi Palanichamy | Trichy Corporation Election 2022பொய் சொல்லுவதற்கு நோபல்  பரிசு வழங்கினால் அது ஸ்டாலினுக்கு தான் ...
திமுகவினருக்கு தோல்வி பயம் வந்து விட்டதால் கொல்லைப்புறம் வழியாக வெற்றி பெற நினைக்கின்றனர். அதிமுக வேட்பாளர்கள் மீது வழக்கு போட்டு, அச்சுறுத்தி தேர்தல் பணியை செய்ய விடாமல் முடக்க நினைக்கின்றனர்.

நாட்டு மக்களுக்கு உண்மை தெரியும்; ஸ்டாலின் பொய் பேசி தப்பித்துக் கொள்ள முடியாது. நீதி, தர்மத்தின்படி நடக்காவிட்டால், எதிர்காலத்தில் பதில் சொல்லியே தீர வேண்டும்” என்றார்.

Next Story
Share it