வேலூர் அருகே பரபரப்பு.. தாலி கட்டிய சில மணி நேரத்தில் புதுப்பெண் எஸ்கேப்..!
வேலூர் அருகே பரபரப்பு.. தாலி கட்டிய சில மணி நேரத்தில் புதுப்பெண் எஸ்கேப்..!

வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அப்போது இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் உறவு முறை சரியில்லை என்பதால் பெற்றோர் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்த இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்து பேசி முடித்தனர். இதையடுத்து, கடந்த 14-ம் தேதி காலை இளம்பெண்ணுக்கும் நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் அங்குள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதையடுத்து மணமக்கள் பெண் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கிருந்த இளம்பெண் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் இளம்பெண்ணை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
தாலி கட்டிய சில மணி நேரத்திலேயே இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

