Theme Check

பணியாரம் ருசியாக இல்லாத ஆத்திரம்.. மனைவியை கொலைசெய்த கணவன்

பணியாரம் ருசியாக இல்லாத ஆத்திரம்.. மனைவியை கொலைசெய்த கணவன்

பணியாரம் ருசியாக இல்லாத ஆத்திரம்.. மனைவியை கொலைசெய்த கணவன்
X

பணியாரம் சுவையாக இல்லை என்பது தொடர்பான தகராறில் மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் லட்சுமணன் (30) - சரண்யா (26) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட லட்சுமணன் அடிக்கடி மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், இரவில் குடிபோதையில் லட்சுமணன் வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு 10 மணிக்கு ஈரோட்டில் உள்ள சரண்யாவின் தம்பி நந்தகுமாருக்கு லட்சுமணன் போன் செய்து, உனது அக்கா திடீரென இறந்து விட்டார் எனக்கூறியுள்ளார்.

girl murder

இதனால், பதற்றமடைந்த சரண்யா குடும்பத்தினர் கஞ்சநாயக்கன்பட்டிக்கு வந்து பார்த்தப்போது, வீட்டில் சரண்யா சடலமாக கிடந்துள்ளார். அவரின் நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டு வீங்கியிருந்துள்ளது. மேலும் கை, காலில் ரத்தக்காயம் இருந்துள்ளது. இதனால், சந்தேகம் கொண்ட சரண்யாவின் சகோதரர் நந்தகுமார், தனது அக்கா சாவில் சந்தேகம் உள்ளது. கணவர் லட்சுமணன் அடித்துக் கொலை செய்துள்ளதாக கூறி போலீசில் புகார் செய்தார்.

இது தொடர்பாக லட்சுமணனை பிடித்து வந்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் லட்சுமணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவத்தன்று லட்சுமணன் மது குடித்துவிட்டு, மனைவி மற்றும் குழந்தைகளுக்காக கடையில் பணியாரம் வாங்கி வந்துள்ளார். அதனை சரண்யா சாப்பிட்டுள்ளார். அந்த பணியாரம் ருசியாக இல்லாததால், சரண்யா கணவனிடம் தகராறு செய்துள்ளார். அந்த தகராறில், சரண்யாவை லட்சுமணன் அடித்துக் கீழே தள்ளியுள்ளார். பிறகு, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் என அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறுகின்றனர். இதையடுத்து, மனைவியை கொன்ற லட்சுமணனை போலீசார் கைது செய்தனர்.

மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it