Theme Check

முதல் முறையாக ட்ரோன் மூலம் பார்சல்.. இந்திய அஞ்சல் துறை அசத்தல்..!

முதல் முறையாக ட்ரோன் மூலம் பார்சல்.. இந்திய அஞ்சல் துறை அசத்தல்..!

முதல் முறையாக ட்ரோன் மூலம் பார்சல்.. இந்திய அஞ்சல் துறை அசத்தல்..!
X

நாட்டிலேயே முதல் முறையாக, ட்ரோன் மூலம் பார்சல் டெலிவரி செய்து இந்திய அஞ்சல் துறை அசத்தியுள்ளது. இது, சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் புஜ் தாலுகாவில் உள்ள ஹபே கிராமத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள நேர் கிராமத்திற்கு ட்ரோன் மூலம் பார்சல்களை அனுப்பி உள்ளது இந்திய அஞ்சல் துறை.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, சுமார் 46 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 25 நிமிடங்களில் கடந்த ட்ரோன், பார்சலை டெலிவரி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், வரும் நாட்களில் ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் பணியை இந்திய அஞ்சல் துறை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் தேவ் சிங் சவுகான் கூறுகையில், “இந்திய அஞ்சல் துறை மருந்து, மாத்திரைகளை ட்ரோன் மூலம் டெலிவரி செய்துள்ளது.

இதன்மூலம், ட்ரோன் மூலம் தபால் விநியோக பணிக்கு ஆகும் செலவு மற்றும் இந்த பணியில் ஊழியர்களுக்கு இடையே உள்ள ஈடுபாட்டையும் அறிந்து கொள்ள முடிந்தது.

‘ட்ரோன் மஹோத்சவ் 2022’ திட்டத்தின் ஒரு பகுதியாக, சோதனை முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Next Story
Share it