பெற்றோர்களே உஷார்.. 4ஆவது திருமணத்துக்கு இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர் !
பெற்றோர்களே உஷார்.. 4ஆவது திருமணத்துக்கு இளம்பெண்ணுக்கு லவ் டார்ச்சர் !

சென்னையின் கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் 18 வயதே ஆன இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது குடும்ப நண்பரான வினோபா நகரை சேர்ந்த ரசூல் கான் (38), அடிக்கடி அப்பெண் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். அப்போது இளம்பெண் மீது ரசூல் கானுக்கு ஒரு கண் இருந்துள்ளது. இந்நிலையில், ஒருநாள் ரசூல் கான் அப்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுகுறித்து தனது தாயாரிடம் கூறி உள்ளார். அவர், ரசூல்கானை கண்டித்துள்ளர். ஆனாலும், ரசூல்கான் தொடர்ந்து அப்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் திட்டவட்டமாக மறுக்கவே ஒருகட்டத்துக்கு பிறகு, தன்னை திருமணம் செய்யும்படி மிரட்டி வந்துள்ளார்.

நிலைமை கைமீறி போவதை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ரசூல்கான் மீது எம்கேபி நகர், கொடுங்கையூர், மணலி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவர் ஏற்கனவே 3 முறை திருமணமாகி, 3 மனைவிகளும் அவரை விட்டு விட்டு சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து நான்காவதாக அப்பெண்ணை திருமணம் செய்ய முயன்றதும் அம்பலமானது. இதனையடுத்து தலைமறைவான அவரை தேடி வந்தனர். இந்நிலையில், கொடுங்கையூர் மூலக்கடை சந்திப்பு அருகே ஒரு சொகுசு காரை போலீசார் மடக்கி சோதனை செய்தபோது, அதில் ரசூல் கான் மற்றும் அவரது நண்பரான பிரபல கஞ்சா வியாபாரி செங்குன்றத்தை சேர்ந்த கார்த்திக் (23) என்பவருடன் செல்வது தெரிந்தது. காரை சோதனை செய்தபோது அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர். கார்த்திக் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்த போலீசார், ரசூல் கான் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
newstm.in

