Theme Check

பெற்றோர்களே உஷார்.. போலீஸ் எச்சரிக்கை..!

பெற்றோர்களே உஷார்.. போலீஸ் எச்சரிக்கை..!

பெற்றோர்களே உஷார்.. போலீஸ் எச்சரிக்கை..!
X

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, சென்னை போக்குவரத்து போலீசார் கூறியதாவது; ‘சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, 400 அடி வெளிவட்ட சாலைகளில் நடக்கும் பைக் ரேஸில் பலர் உயிரிழந்துள்ளனர். அதுபோல், மெரீனா கடற்கரை சாலையிலும் பைக் ரேஸில் பலர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, பைக் ரேஸ் சாகசம் புரிவதை முழுவதுமாக கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த 10 நாட்களில் பைக் ரேஸில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பைக் ரேஸில் ஈடுபடும் சிறார் மற்றும் இளைஞர்களிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் வாங்கப்படும்.

நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தை மீறி பைக் ரேஸில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story
Share it