Theme Check

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மகளை மீட்கக்கோரி பெற்றோர் கண்ணீர் புகார்!!

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மகளை மீட்கக்கோரி பெற்றோர் கண்ணீர் புகார்!!

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மகளை மீட்கக்கோரி பெற்றோர் கண்ணீர் புகார்!!
X

திருவண்ணாமலை நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள தனது மகளை மீட்டு தரக்கோரி தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீ நாகேஷ் - மாலா தம்பதியரின் மகளான வர்தினி என்பவர், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் நித்யானந்த ஆசிரமத்தில் சேர்ந்தார். ஸ்ரீ நாகேஷும் மாலாவும் நித்யானந்தரின் சீடர்கள்.

இந்நிலையில் தற்போது தனது மகளை நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள நிர்வாகிகள் தங்களிடம் காண்பிக்க கூட மறுக்கிறார்கள் என்றுகூறி, அதனால் தங்கள் மகளை மீட்டு தருமாறு பெங்களூரு காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

girl

மேலும் ஆசிரம நிர்வாகிகள் வர்தினியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி தற்போது திருவண்ணாமலை ஆசிரமத்தில் மறைத்து வைத்திருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் புகாரின்பேரில் திருவண்ணாமலை காவல்துறையினர் கிரிவலப்பாதையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண்ணை தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it