Theme Check

கட்டணத்தில் சலுகை கேட்ட பெற்றோர்… அடியாள் வைத்து தாக்கிய பள்ளி!!

கட்டணத்தில் சலுகை கேட்ட பெற்றோர்… அடியாள் வைத்து தாக்கிய பள்ளி!!

கட்டணத்தில் சலுகை கேட்ட பெற்றோர்… அடியாள் வைத்து தாக்கிய பள்ளி!!
X

தனியார் பள்ளியில் கட்டணச் சலுகை கேட்ட பெற்றோரை, பள்ளி நிர்வாகம் அடியாள் வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பைப்விவாடி நகரில் உள்ள தனியார் பள்ளியில் சில விதிமுறைகள் படி மாணவ - மாணவிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் இரு மாணவர்களின் பெற்றோர் கட்டணத்தில் சலுகை கேட்டுள்ளனர்.

mh

கட்டணச் சலுகை அளிக்க பள்ளி நிர்வாகம் மறுத்த நிலையில், பள்ளி முதல்வரை சந்திக்க பெற்றோர் அனுமதி கேட்டனர். அப்போது, அந்த பள்ளி நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட பெண் அடியாள் ஒருவர், மாணவர்களின் பெற்றோர் மீது தாக்குதல் நடத்தினார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளி நிர்வாகம் மற்றும் பெண் அடியாள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் சில கல்வி நிறுவனங்கள் கட்டுக்கடங்காத மாணவர்கள், ஆத்திரப்படும் பெற்றோரை தடுக்க அடியாட்களை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

mh

பெற்றோரைத் தாக்கிய பெண் அடியாள் மீது தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பெண் அடியாள் மாணவர்களின் பெற்றோரை மிகவும் மோசமாக பேசியதாக தெரிகிறது. அதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it