அதிர்ச்சியில் பங்குதாரர்கள்!! பங்குச் சந்தையில் எல்ஐசியின் பங்குகள் சரிவு !!
அதிர்ச்சியில் பங்குதாரர்கள்!! பங்குச் சந்தையில் எல்ஐசியின் பங்குகள் சரிவு !!

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்று லாபம் ஈட்ட திட்டமிட்ட மத்திய அரசு, அதுதொடர்பான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. மேலும் ஒரு பங்குக்கு ரூ. 949-க்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை கடந்த மே 6-ம் தொடங்கியது.
இந்த நிலையில் அந்நிறுவனத்தின் மொத்த பொது பங்குகளையும் பாலிசிதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வாங்க ஆர்வம் காட்டியதால் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு, அரசுக்கு ரூ. 20,557 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இதையடுத்து இந்த பங்குகள் அனைத்தும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு, மே 17-ம் தேதி விற்பனை தொடங்கியது. இதில் பங்குகள் அனைத்தும் வாங்கிய விலையிலிருந்து 8.11 சதவீதமாக குறைவாகவே ரூ. 872-க்கு விற்பனையானது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் பங்கு வர்த்தகத்தில் எல்ஐசியின் பங்குகள் விலை குறைந்துகொண்டே வந்தது.

இந்நிலையில், இன்று ஒரேநாளில் எல்.ஐ.சி. பங்குகள் ரூ.14 வரை குறைந்ததால் ரூ.786.20-க்கு விற்பனையாகி வருகிறது. எல்ஐசி சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்துள்ளது. பங்கு ஒன்று ரூ.949 விலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசி பங்கின் விலை ரூ.163 வரை சரிந்துள்ளது. இதன்மூலம் ரூ.6 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட எல்ஐசியின் தற்போதைய மதிப்பு ரூ.4,97,113 கோடியாக பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ரூ.5 லட்சம் கோடிக்கு கீழ் சரிந்துள்ளதால் பங்குகளை வாங்கியவர்களின் நிலை பரிதாபமாகியுள்ளது.

