Theme Check

பயணிகள் ரயில் சேவை மே 29 முதல் மீண்டும் தொடங்கும்..!!

பயணிகள் ரயில் சேவை மே 29 முதல் மீண்டும் தொடங்கும்..!!

பயணிகள் ரயில் சேவை மே 29 முதல் மீண்டும் தொடங்கும்..!!
X

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது. இதனால் இந்தியாவிலும் மார்ச் 2020 முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவைகளை நிறுத்தப்பட்டது.

தற்போது இந்தியா மற்றும் வங்கதேசத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் சேவையை மீண்டும் தொடங்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, டாக்காவிலிருந்து கொல்கத்தா- டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ், வங்காளதேச ரெயில்வே ரேக் மற்றும் கொல்கத்தா குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் ஆகியவை கொல்கத்தாவிலிருந்து இந்திய ரயில்வே ரேக் மூலம் வரும் 29-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் என்.ஜே.பி-டாக்கா மிடாலி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.

Next Story
Share it