Theme Check

பயணிகள் மகிழ்ச்சி.. தூத்துக்குடி- சென்னை இடையே மேலும் ஒரு விமான சேவை !!

பயணிகள் மகிழ்ச்சி.. தூத்துக்குடி- சென்னை இடையே மேலும் ஒரு விமான சேவை !!

பயணிகள் மகிழ்ச்சி.. தூத்துக்குடி- சென்னை இடையே மேலும் ஒரு விமான சேவை !!
X

தூத்துக்குடி விமான நிலையம் மூலம் சமீபகாலமாக அதிக அளவில் பயணிகள் விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடி விமான நிலையம் முன்பைவிட இப்போது பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், தூத்துக்குடி-சென்னை இடையே தினமும் 3 நேரங்களில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதே போன்று தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோடை காலத்தையொட்டி பயணிகள் வரத்து அதிகரித்து உள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

airport

அதன்படி வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இந்த விமானம் கூடுதலாக இயக்கப்படுகிறது. இந்த விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைகிறது. தூத்துக்குடியில் இருந்து மதியம் 1.35 மணிக்கு மீண்டும் புறப்பட்டு சென்னையை சென்றடைகிறது.

இந்த விமானம் வருகிற 1ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கோடைகாலம் முழுவதும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் மேலும் வளர்ச்சி பெற்று வருகிறது.

newstm.in

Next Story
Share it