பத்தல, பத்தல.. பாடலுக்கு எதிர்ப்பு.. கமல்ஹாசன் மீது காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் !!
பத்தல, பத்தல.. பாடலுக்கு எதிர்ப்பு.. கமல்ஹாசன் மீது காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் !!

கமல் நடிக்கும் விக்ரம் படத்தை அவரது தீவிர ரசிகரும், தமிழ் சினிமாவின் இளம் இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, அனிருத், கே.ஜி.எஃப் ஸ்டன்ட் டைர்க்டர்கள் அன்பறிவு என திரையுலகில் சிறந்த கலைஞர்கள் இப்படத்தில் உள்ளனர்.
இதனாலேயே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விக்ரம் படத்திலிருந்து டைட்டில் டீசர் மற்றும் கிளிம்ஸ் காட்சிகள் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டிருந்தன. மே 15ஆம் தேதி நடக்கும் பிரமாண்ட விழாவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் முதற்கட்டமாக கமலின் வரி மற்றும் குரலில் பத்தல, பத்தல என்ற என்ற முதல் பாடல் வெளியாளியுள்ளது. சென்னைத் தமிழில் வெளியாகியுள்ள இந்தப் பாடலில் ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னும் இல்ல இப்பாலே.. என்று மத்திய அரசை விமர்சிக்கும் வரிகள் இடம்பெற்றிருந்தன. இந்தப் பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் ஒருதரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, "பத்தலே பத்தலே" என்ற பாடலில் மத்திய அரசை தி௫டன் என்று கூறும் வகையில் அமைந்துள்ள "கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே..
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது... தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே...
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே" என்று வரிகள் அமைந்துள்ளன.

மேலும், ஜாதிய ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையில் அமைந்துள்ள "குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு... குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு... ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-பே" என்ற பாடல் வரிகளை நீக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இணையதளம் மூலமாக புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூன் 3ம் தேதி வெளிவரக்கூடிய விக்ரம் படத்திற்கு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு படத்தை தடை செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம், என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

