Theme Check

நேரத்த வீணடிக்காம அதுல கவனம் செலுத்துங்க.. ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கடிதம்..!

நேரத்த வீணடிக்காம அதுல கவனம் செலுத்துங்க.. ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கடிதம்..!

நேரத்த வீணடிக்காம அதுல கவனம் செலுத்துங்க.. ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கடிதம்..!
X

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை என முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தில், “அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட சமூக நீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை. விவாதிக்காமல் அமைப்பு ஏற்படுத்தி விட்டு அதில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணானது.

எனவே, சமூக நீதி கூட்டமைப்பில் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து விட்டு, நீட் போன்ற மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it