மக்களே உஷார்..!! தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மின்வெட்டு ஏற்படும் பகுதிகள்..!!
மக்களே உஷார்..!! தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மின்வெட்டு ஏற்படும் பகுதிகள்..!!

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (11-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம்:
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆறுமுகநேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் மழைகாலங்களில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் உள்ள பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, ஆலந்தலை, கணேசபுரம், கந்தசாமிபுரம், ஆலந்தலை மெயின்ரோடு, சுனாமி நகர், அடைக்கலாபுரம், ராணிமகாராஜபுரம், சுனாமி நகர், அண்ணா நகர், பிலோமி நகர், அடைக்கலாபுரம் - ஆறுமுகநேரி ரோடு, நைனார்பத்து, சீர்காட்சி, முதலூர் ஏபி நகர், கருவேலம்பாடு, வீராக்குளம், மடத்துவிளை, பிரண்டார்குளம், உடன்குடி, கடாச்சபுரம், அன்பின்நகரம், மெய்யூர், வெங்கட்ராமானுஜபுரம், செட்டிவிளை, பெரியதாழை, தோப்புவிளை, இடைச்சிவிளை ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம்:
கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையப் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே வீரசோழன் வழித்தடத்தில் மின் விநியோகம் பெறும், சின்னஉடப்பங்குளம், பெரியஉடப்பங்குளம், மண்டலமாணிக்கம், வலையபூக்குளம், எழுவணூா், காக்குடி, போத்தநதி, பெருமாள்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 11 தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

