Theme Check

மக்களே உஷார்..!! தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று..!!

மக்களே உஷார்..!! தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று..!!

மக்களே உஷார்..!! தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று..!!
X

2019 ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தொடர்ந்து பல்வேறு உருமாற்றங்களுடன் அவ்வப்போது பரவி வருகிறது. இது தொடர்பாக உலக அளவில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.இந்த கொரோனாவால் வளர்ந்த நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பி.ஏ.4 வகை கொரோனா தொற்று 4 பேருக்கும், பி.ஏ.5 வகை கொரோனா தொற்று 8 பேருக்கும் ஏற்பட்டுள்ளது. நாவலூர் பகுதியில் பி.ஏ.4 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உருமாறிய ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 12 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Next Story
Share it