மக்களே உஷார்..!! இந்த 2 மாதங்கள் இந்தியா இருளில் மூழ்கும் அபாயம்?
மக்களே உஷார்..!! இந்த 2 மாதங்கள் இந்தியா இருளில் மூழ்கும் அபாயம்?

நாடு முழுவதும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மின்தடை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
தற்போதைய, அதி நவீன உலகில் மின்சாரம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட மனிதனால் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மனிதனின் அத்தியாவசிய தேவையாக, மின்சாரம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக, நாடு முழுவதும் மின் தடைப் பிரச்சினை மீண்டும் ஏற்பட்டுள்ளது. தற்போது, நிலக்கரி விநியோக பிரச்சனை காரணமாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் மின் தடை ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கோல் இந்திய நிறுவனம் நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசுக்கு அனுமதி அளித்திருந்தது. அப்படி இருந்தும் தற்போது மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனிடையே நிலக்கரி கையிருப்பு மற்றும் விநியோகம் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம் என்ற காரணத்தினால் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், பருவமழையின் காரணமாக நிகக்கரியை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அனல் மின் நிலையங்களுக்குப் நிலக்கரி கொண்டு செல்வது மற்றும் கொள்முதல் செய்வதில் தாமதல் ஏற்பட்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

