Theme Check

மக்களே உஷார்.. வரும் 7-ம் தேதி உருவாகுது.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

மக்களே உஷார்.. வரும் 7-ம் தேதி உருவாகுது.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

மக்களே உஷார்.. வரும் 7-ம் தேதி உருவாகுது.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
X

வரும் 7-ம் தேதி, வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்றும் (4-ம் தேதி), நாளையும் (5-ம் தேதி) சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 6 மற்றும் 7-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில், நாளை மறுதினம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகிறது என்றும், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் அது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும்.

இதன் காரணமாக நாளை மறுதினம் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், அதற்கு அடுத்த நாள் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தேவகோட்டை 8 செ.மீ., அம்பாசமுத்திரம் 6 செ.மீ., பேச்சிப்பாறை, தஞ்சாவூர் தலா 4 செ.மீ., சிவலோகம், கும்பகோணம், சிற்றாறு தலா 3 செ.மீ., போடிநாயக்கனூர், சோலையாறு தலா 2 செ.மீ., கன்னிமார், விருதுநகரில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது’ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story
Share it