Theme Check

மக்களே உஷார்.. இன்று இந்த 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

மக்களே உஷார்.. இன்று இந்த 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

மக்களே உஷார்.. இன்று இந்த 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!
X

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி புதன்கிழமை உருவானது.இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது. இது நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் திரிகோணமலைக்கு வடகிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவிலும்,நாகப்பட்டினத்திற்கு கிழக்கு, தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
rain
இதன் காரணமாக கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ,விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும், தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம், என எச்சரிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it