மக்களே உஷார்.. தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு.. ஒரே மாதத்தில் ஆயிரத்தை கடந்த பாதிப்பு !!
மக்களே உஷார்.. தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு.. ஒரே மாதத்தில் ஆயிரத்தை கடந்த பாதிப்பு !!

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கும் மத்தியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது மருத்துவத்துறைக்கு சவாலை ஏற்படுத்தியது. மக்களும் அச்சத்தில் உள்ளனர். அதாவது, கடந்த 2019 ஆண்டு மட்டும் தமிழகத்தில் 8,527 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபபட்டனர். இந்தாண்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பு விகிதம் ஏறத்தாழ 75 சதவீதம் குறைந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த ஆண்டில், தமிழகத்தில் மொத்தம் 2,410 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் குணம் அடைந்துவிட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்தது.

ஆனால், கடந்த ஆண்டு 6,039 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோன்று 150-க்கும்மேற்பட்டோர் சிக்குன் குனியாவிலும், 500-க்கும் அதிகமானோர் மலேரியாவிலும், 1,028 பேர் லெப்டோஸ்பிரோசிஸ்எனப்படும் எலிக் காய்ச்சலாலும், 2,220 பேர்ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்றுக் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்தது.
இந்நிலையில், இந்தாண்டு அதைவிட வேகமாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை தமிழகத்தில் 1,025 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவை, தேனி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக திருச்சி, சங்கரன்கோவில், மதுரையில் பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை, டெங்கு தடுப்புப் பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் கொசு ஒழிப்பு, குடியிருப்பு பகுதிகளை சுகாதாரமாக வைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
newstm.in

