Theme Check

மக்களே உஷார்.. இந்தியாவில் மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு !

மக்களே உஷார்.. இந்தியாவில் மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு !

மக்களே உஷார்.. இந்தியாவில் மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு !
X

இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து நான்காயிரத்தை நெருங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்கிறது. அதன்படி தினசரி பாதிப்பு நேற்று முன் தினம் 2,927 , நேற்று 3,303 ஆக இருந்தது. தற்போது மேலும் அதிகரித்து நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு 3,377 ஆக அதிகரித்தது.

corona

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,30,68,799 லிருந்து 4,30,72,176 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 2,496 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,28,128 லிருந்து 4,25,30,622 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 17,801 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,980 லிருந்து 17,801 ஆனது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,23,753 ஆக உயர்ந்தது.

corona

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலையில் வெளியிட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it