பொதுமக்களே உஷார்.. இந்த பகுதிகளில் இன்று கரன்ட் இருக்காது..!
பொதுமக்களே உஷார்.. இந்த பகுதிகளில் இன்று கரன்ட் இருக்காது..!

ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் இன்று (13-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் திருநாவுக்கரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் மின் கம்பம் பழுது அடைந்துள்ளது.
இதனால், ஊழியர்கள் பணியாற்றுவதில் சிக்கல் நீடித்து வந்தது. ஆகவே பழுதடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணியும், மின் பராமரிப்பு பணிகளும் இன்று (13-ம் தேதி) புதன்கிழமை நடக்கிறது.
இதன்காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குளம், ராஜாபட்டி ஆகிய பகுதிகளில் மின் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் முன் எச்சரிக்கையாக இருக்கும்படி மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

