Theme Check

மாநில கல்விக் கொள்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம் - தமிழக அரசு !!

மாநில கல்விக் கொள்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம் - தமிழக அரசு !!

மாநில கல்விக் கொள்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம் - தமிழக அரசு !!
X

மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்றும், மாநில அளவில் கல்வி கொள்கையை உருவாக்குவோம் என்றும் தமிழக அரசு கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது

அந்த குழுவில் பேராசிரியர்கள், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

secretariate

இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படும் என்று குழு தலைவர் முருகேசன் தெரிவித்துள்ளார். அதன்படி மாநில கல்விக் கொள்கை தொடர்பாக கல்வியாளர்களிடம் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என உயர்மட்ட குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க பொதுமக்கள், தன்னார்வலர்கள், கல்வியாளர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துக்கள், ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

secretariate

அதன்படி செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 'செண்டர் ஃபார் எக்சலன்ஸ்' கட்டிடத்தின் 3-வது தளத்தில் சென்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம், என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in

Next Story
Share it