Theme Check

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! இன்று இரவு வானில் தோன்ற உள்ள பெரிய நிலா..!!

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! இன்று இரவு வானில் தோன்ற உள்ள பெரிய நிலா..!!

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! இன்று இரவு வானில் தோன்ற உள்ள பெரிய நிலா..!!
X

நிலவு அதன் சுற்றுப்பாதையில், பூமிக்கு மிக அருகில் இருக்கும் அதே நேரத்தில் முழுநிலவாக இருக்கும் போது சூப்பர் மூன் அதாவது பெருநிலவு ஏற்படுகிறது.

நீள்வட்டப்பாதையின் மிக தொலைதூர புள்ளி என்பது அப்போஜீ (apogee) என்று அழைக்கப்படும். இது பூமியில் இருந்து சராசரியாக நான்கு லட்சத்து ஐந்தாயிரத்து ஐநூறு கிலோமீட்டர் (405,500 kilometers) தொலைவில் உள்ளது.மிக அருகில் உள்ள புள்ளி பெரிஜீ (perigee) என்று அழைக்கப்படுகிறது. இது பூமியில் இருந்து கிட்டத்தட்ட மூன்று லட்சத்து மூன்றாயிரத்து முந்நூறு கிலோமீட்டர்கள் (363,300 kilometers) தொலைவில் உள்ளது.

1

எனவே, முழு நிலவானது பூமிக்கு மிக அருகில் உள்ள பெரிஜீ புள்ளியில் தோன்றும் போது சற்று பிரகாசமாகவும் வழக்கமான முழு நிலவை விட பெரிதாகவும் தோற்றமளிக்கும். இதைத்தான் சூப்பர்மூன் அதாவது பெருநிலவு என்று அழைக்கிறோம்.இந்தாண்டில் மிகப்பெரிய சூப்பர் மூன் இன்று ஜூலை 13ம் தேதி மிகப் பிரகாசமாக தெரிய உள்ளது. இந்த பெரிய நிலவிற்கு 'பக் சூப்பர் மூன்' அல்லது, 'தண்டர் மூன்' அல்லது 'ஹே அல்லது 'மெட் மூன்' என்று பெயரிட்டுள்ளனர்.

பூமிக்கு மிக அருகே ஆண்டுக்கு 3 அல்லது 4முறை நிலவு வரும்போது, சூப்பர் நிலவு தோன்றும். பூமி கோளுக்கு அருகே நிலவு வரும்போது, வழக்கத்தைவிட 17 சதவீதம் அளவில் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும் இருக்கும். இன்றைய தினம் நிலவு பூமியில் இருந்து 3,57,264 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூப்பர் மூன் ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை வரை தோன்றலாம். சூப்பர் மூன் வழக்கத்தைவிட 17 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும் இருக்கும். கடந்த மாதம் சூப்பர் மூன் உருவானது, அதற்கு ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் என்று பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் மூன் ஜூலை 13 இரவு 12:08 am மணிக்கு, வியாழன் அன்று தெரியும்.


Next Story
Share it