மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க..!! 1 லட்சம் முகாம்கள் ஏற்பாடு..!!
மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க..!! 1 லட்சம் முகாம்கள் ஏற்பாடு..!!

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தற்போது, 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.அதைத்தொடர்ந்து, ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மே 8-ம் தேதி மற்றும் ஜூன் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் அத்தகைய முகாம்கள் நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு லட்சம் இடங்களில் 31-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.சுமார் 1 லட்சம் முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரு வார்டுக்கு 17 இடங்களில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நாளை 11-ம் தேதி (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதனால், அன்றைய தினத்தில் வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும்’ என்று கூறினர்.

