உளவுத் துறை கட்டடம் அருகே வசிக்கும் மக்கள் வெளியேறுங்கள்: ரஷ்யா எச்சரிக்கை !!
உளவுத் துறை கட்டடம் அருகே வசிக்கும் மக்கள் வெளியேறுங்கள்: ரஷ்யா எச்சரிக்கை !!

கீவ் நகரின் உளவுத்துறை கட்டடத்திற்கு அருகே வசிக்கும் மக்கள் வெளியேற வேண்டும் என ரஷ்ய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்ய ராணுவ படைகள் தொடர்ந்து 6ஆவது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக, அரசு கட்டடங்கள், ராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்த தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் சிதலமடைந்து வருகிறது. அந்த வகையில், கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது இன்று ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்தன. இதில், அந்த கட்டிடமே இடிந்து விழுந்தது. இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவர் பலியானார். மேலும், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இந்நிலையில், கீவ் நகரில் உள்ள உளவுத்துறையின் கட்டடத்தின் அருகே வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கை வெளியான நிலையில், உளவுத்துறையின் கட்டடம் மீது ரஷ்ய படைகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் அச்சம் எழுந்துள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
newstm.in